Testimonies - 6th to 12th December 2015 Retreat (Bon Secours Sisters)
சாட்சியங்கள் - 2015 டிசம்பர் தியானம் (அருட்சகோதரிகள்)
அருட்சகோதரி. பிரகாசி – பெங்களூர் :

கடந்த ஒரு வருடமாக இடுப்பு வலியினால் மிகவும் அவதிப்பட்டு வந்தேன். ஆராதனையின் போது அருட்தந்தை அவர்கள், இடுப்பு வலியினால் அவதியுறும் அருட்சகோதரிகள் குணமடைகிறார்கள் என்று கூறினார். அப்போதிருந்து என் வலி நீங்கிவிட்டது. என் வலியை நீக்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

அருட்சகோதரி. நம்பிக்கைமேரி – சென்னை :

கடந்த ஒரு வருடமாக அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்களின் தியானத்திற்க்காக மிகவும் ஆவலுடனும், நம்பிக்கையுடனும் காத்திருந்தேன். நான் ஏற்கனவே பைபாஸ் ஆபரேஷன் செய்துள்ளேன். இறைவனிடம் தியானத்திற்க்கு செல்லும்போது எந்த தடையும் வரக்கூடாது என்று வேண்டிகொண்டிருந்தேன். அதற்கு ஏற்றாற்போல் மழை பெய்து, வெள்ளம் வந்ததால், போகத்தான் வேண்டுமா? என்று கேட்டார்கள். நானோ போயே தீருவேன் என்று சொல்லி விட்டு வந்தேன்.

இறைவன் என்னை நிறைவாக இந்த தியானம் மூலமாக ஆசீர்வதித்து இருக்கிறார். எனக்கு காது சரியாக கேட்காது. அதனால் முதல்நாள், முதல்வரிசையில் அமர்ந்திருந்தேன். உயரப்படி அமரவைக்கிறேன் என்று என்னை கடைசிவரிசையில் அமரவைத்து விட்டார்கள். முதல்நாள் எனக்கு எதுவுமே கேட்கவில்லை. இரண்டாம் நாளிலிருந்து கடவுள் அதிசயமாக என் காதை திறந்து அனைத்து வகுப்புகளையும் அருமையாக பின்னாலிருந்தும் கேட்க வைத்தார். இந்த தியானத்தில் கலந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. இறைவனுக்கு ஸ்த்தோத்திரம்.

அருட்சகோதரி. குழந்தை – திருச்சி :

சிறிது நாட்களாகவே எனக்கு தொண்டையில் பிரச்னை இருந்தது. நன்றாக பாடக்கூடிய என்னால் பாடவே முடியாமல் இருந்தது. இங்கு வந்ததில் இருந்து கடவுளிடம் என் தொண்டை பிரச்னை நீங்கவேண்டும் என்று வேண்டிகொண்டிருந்தேன். கவுன்சிலிங் சென்ற போது அருட்சகோதரி அவர்கள், என்னை கடவுள் தொட்டு ஆசீர்வதித்து இருக்கிறார், தொண்டை சரியாகி விட்டது, நான் தான் உணரவில்லை என்றார். ஆலயத்திற்க்கு வந்து இறைவனுக்கு நன்றி கூறினேன். அதன்பிறகிலிருந்து பழையபடி என்னால் நன்றாக பாடமுடிகிறது. இறைமகன் இயேசுவுக்கு நன்றி.

அருட்சகோதரி. செபஸ்தியம்மாள் – தஞ்சாவூர் :

எனக்கு ஏற்ப்பட்ட ஒரு விபத்தில், எனது இடது கை தனியாக துண்டாகிவிட்டது. அதன்பின் அதை ஒட்டவைத்தார்கள். அப்போதிருந்து எனது இடது கையால் எதுவுமே தூக்க முடியாது. தியானத்திற்க்கு வந்ததிலிருந்து என்னால் இடது கையால் எல்லாமே செய்ய முடிகிறது. (இடது கையால் எல்லாம் செய்து காட்டுகிறார்). மேலும் அந்த விபத்திற்கு பின் என் இடது காதும் கேட்காமல் இருந்தது. இப்போது என் இடது காதும் நன்றாக கேட்கிறது. என்னை தொட்டு சுகப்படுத்திய இறைமகன் இயேசுவுக்கு ஸ்த்தோத்திரம்.

அருட்சகோதரி. குழந்தை தெரஸ் – காஞ்சிபுரம் :

எனக்கு கேஸ்ட்ரிக் பிரச்னை இருந்தது. எதாவது சாப்பிட்டால் தொண்டை, நெஞ்செரிச்சல் இருக்கும். தியானத்திற்க்கு வந்த 2ம் நாளிலிருந்து நெஞ்செரிச்சல் முற்றிலும் நீங்கிவிட்டது. அதேபோல் என்னுடைய நடுமுதுகில் எப்போதும் ஒரு வலி இருந்து கொண்டே இருக்கும். 2ம் நாளிலிருந்து அந்த வலியும் முற்றிலும் நீங்கிவிட்டது. இயேசுவுக்கு நன்றி.