Testimonies - 2015 December Retreat (Laity)
சாட்சியங்கள் - 2015 டிசம்பர் மாத தியானம் (பொதுமக்கள்)
பென்சில்யா சந்தனமேரி – நாகப்பட்டிணம் , டிசம்பர் 17, 2015:

எனக்கும் என் கணவருக்கும் விவாகரத்து செய்ய முடிவாகி கோர்ட்டில் முதல் ஃகியரிங் முடிந்து 2வது ஃகியரிங்கிற்கு கோர்ட்டிற்க்கு செல்ல வேண்டிய நிலையில், சோகத்தூர் ஆசிரமத்திற்கு சென்று வாருங்கள் என்று எங்களுக்கு வேண்டியவர்கள் சொன்னதால், இந்த தியானத்திற்க்கு வர முடிவு செய்தோம். என்ன அதிசயம். இந்த தியானத்திற்க்கு நாங்கள் ஒரு திருக்குடும்பமாக என் கணவர், பிள்ளையுடன் சமாதானமாகி வந்துள்ளேன். இங்கு வருமுன்னே கடவுள் எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்துவிட்டார். அல்லேலூயா. மேலும் எனக்கு தாங்கமுடியாத இடுப்புவலியும் உண்டு. அதையும் கடவுள் குணப்படுத்தி விட்டார். இந்த இடத்தில் அதிசயங்களை செய்துவரும் இறைவனுக்கு கோடான கோடி நன்றி.

டென்னிஸ் ஜேசுதாஸ் – கூடலூர் , டிசம்பர் 17, 2015:

முதுகுவலியினால் வெகு நாட்களாக கஷ்டப்பட்டு வந்தேன். இங்கு வந்தபின் எனக்கு அது முற்றிலுமாக மறைந்துவிட்டது. மேலும் சற்று சப்தமாக பேசினாலும் எனக்கு மூச்சிறைக்க ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த 4 நாட்களாக ஆராதனையிலும், பாடல் பாடியும் சப்தமாக ஜெபித்தும் வருகிறேன். எந்த பிரச்னையும் இல்லை. அடுத்து இரவில் படுத்தால் எனக்கு தூக்கமே வராது. எதையாவது பற்றி சிந்தித்து கொண்டேயிருப்பேன். தூங்க 2 மணியாகிவிடும். ஆனால் இங்கு வந்ததிலிருந்து படுத்தவுடன் தூங்கிவிடுகிறேன். காலையில் 5.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுறேன். என்னில் 3 அதிசயங்களை செய்த இறைவனுக்கு நன்றி, நன்றி.

ஞானம் – தர்மபுரி , டிசம்பர் 17, 2015:

எனக்கு ஒரு வகையான தூக்கவியாதி. ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டால் 5 நிமிடத்தில் தூங்கிவிடுவேன். அது கோயிலாக இருந்தாலும் சரி. தியானத்தில் கலந்து கொள்ள வரும்போது இதைபற்றி தான் அதிகம் கவலைப்பட்டேன். கோவிலில் தூங்காமல் இருக்கவேண்டுமே என்று. என்ன அதிசயம். இந்த 4 நாட்களும் 1 நிமிடம் கூட நான் தூங்கவேயில்லை. இறைவனுக்கு கோடான கோடி நன்றி. மேலும் எனக்கு இடுப்பு வலியும் இருந்தது. அதுவும் முற்றிலும் குனமாகிவிட்டது. யேசப்பாவுக்கு கோடான கோடி நன்றி.

மரிய ஜோசப் – விழுப்புரம் , டிசம்பர் 17, 2015:

எனக்கு நெற்றியில் நிறைய தேமல் இருந்தது. தியானத்திற்கு வந்தபின் தேமல் எனக்கு மறைந்துவிட்டது. யேசுவுக்கு ஸ்தோத்திரம்.

மேரி சுகுணா – பெங்களுர் , டிசம்பர் 17, 2015:

எனக்கு முதுகில் டிஸ்க் ரீப்பிளேஸ்மெண்ட் ஆபரேஷன் நடந்துள்ளது. இடுப்பில் பெல்ட் போடாமல் என்னால் இருக்கவே முடியாது. இதனாலேயே என் வேலையை கூட ராஜினாமா செய்துவிட்டேன். தியானத்திற்க்கு மிகவும் நம்பிக்கையோடு வந்தேன். இங்கு வந்ததிலிருந்து நான் என்னுடைய பெல்ட்டையே பயன்படுத்தவில்லை. எல்லோரையும் போல நன்றாக ஆடிப், பாடி இறைவனை போற்றி புகழ்ந்து மகிழ்ந்தேன். எனக்கு எந்த வலியோ பிரச்னையோ இல்லை. அல்லேலூயா. கடவுளுக்கு ஸ்தோத்திரம்.

ரூபினி – திருவண்ணாமலை , டிசம்பர் 17, 2015:

கடந்த 10 வருடங்களாக மாதவிடாய் போக்கினால் எண்ணற்ற இன்னலுற்று வருகிறேன். 10 நாட்களுக்கு போக்கு நிற்காது. 5ம் நாளிலிருந்து மாத்திரை சாப்பிட வேண்டும். சிறிது வேகமாக பேசினாலும் எனக்கு கருப்பையில் வலி எடுக்கும். தாங்க முடியாத வலி. எனக்கு இந்த 2 பிரச்னைகளிலும் இருந்து கடவுள் விடுதலை கொடுத்திருக்கிறார். எல்லோரையும் போல நானும் சப்தமாக ஜெபிக்கிறேன். பாடுகிறேன். ஆராதனையில் ஈடுபடுகிறேன். என்னை தொட்டு ஆசீர்வதித்த இயேசுவுக்கு கோடி நன்றி.