Testimonies - 2015 October Retreat (Laity)
சாட்சியங்கள் - 2015 அக்டோபர் மாத தியானம் (பொதுமக்கள்)
லாரன்ஸ் – மன்னார்குடி , அக்டோபர் 15, 2015:

கடந்த 2 ஆண்டுகளாக ஒற்றை தலைவலையினால் அவதிப்பட்டு வருகிறேன். பல மருத்துவர்களை பார்த்துவிட்டேன். தினமும் இந்த 10 மாத்திரைகளை சாப்பிட்டால் தான் என் தலைவலி கட்டுக்குள் வரும். (மாத்திரைகளை காட்டுகிறார்) இங்கு தியானத்திற்க்கு வரும் போது மிகுந்த நம்பிக்கையோடு வந்தேன். இங்கு வந்த நாளிலிருந்து என் தலைவலி எங்கு சென்றது என்றே தெரியவில்லை. என் ஒற்றை தலைவலியை குணப்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி.

சார்லஸ் – சென்னை , அக்டோபர் 15, 2015:

கடந்த 6-7 ஆண்டுகளாக கேஸ்ட்டிரிக் பிரச்னையினால் கடுமையாக அவதிப்பட்டு வந்தேன். என் அடிவயிற்றில் எப்பொழுதுமே கடுமையாக வலி இருக்கும். பாரமாகவும் இருக்கும். ஆனால் தியானத்திற்க்கு வந்த பிறகு என் கேஸ்ட்டிரிக் பிரச்னை முற்றிலும் நீங்கியதாக உணர்கிறேன். எனக்கு எந்த வயிற்று பாரமோ, வலியோ இல்லை. கடவுளுக்கு நன்றி.

ஜோசப் எட்வர்ட் – சென்னை , அக்டோபர் 15, 2015:

என்னுடைய 2 தாடை எலும்புகளும் தேய்ந்து போய் விட்டன. என்னால் வாயை அதிகம் திறக்க முடியாது. பேசவும் முடியாது. மிகவும் வலியாக இருக்கும். ஆனால் என்னுடைய வேலை அதிகம் பேச வேண்டியதாக இருக்கிறது. என்னுடைய மன உலைச்சலுக்கு அளவே கிடையாது. இந்த தாடை வலியினால் என் வேலையை நான் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற பயத்தொடு இருந்தேன்.

ஆனால் இந்த தியானத்திற்கு வந்த 2ம் நாளிலிருந்து என்னால் நன்றாக வாயை அசைக்க முடிகிறது. பேச முடிகிறது. எந்த வலியும் இல்லை. என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுகப்படுத்திய ஆண்டவருக்கு ஸ்த்தொத்திரம்.

செல்வராஜ் – ஓசூர் , அக்டோபர் 15, 2015:

நான் தான் இந்த தியானத்தின் மிகப்பெரிய சாட்சியமாக இருப்பேன் என்று நினைக்கிறேன். எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காரில் செல்லும்பொது விபத்து ஏற்ப்பட்டு என் வலது காலில் தொடைக்கு கீழ் உள்ள எலும்பு முறிந்து முட்டிக்கு மேல் வந்து விட்டது. சிகிச்சை முடிந்தாலும் அந்த காலில் ஏற்படும் வலியானது கடந்த 5 ஆண்டுகளாக நிற்கவேயில்லை. டாக்டர்களும் என்னென்னவோ செய்தார்கள். ஒன்றும் முடியவில்லை. இதற்க்கு ஒரே மருந்து நானாக எடுத்துகொள்ளும் ¼ பாட்டில் பிராந்தி தான்.

ஒவ்வொரு நாளும் வலி எடுக்கும் போது அதை ஊற்றினால் தான் எனக்கு அந்த வலி தெரியாது. இப்படித்தான் என் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. என்னுடைய நண்பரின் மனைவியானவர் தான் என் நிலைமையைக் கண்டு இந்த தியனத்திற்கு அவர்கள் குடும்பத்தோடு எனக்கும் சேர்த்து (எனக்கு தெரியாமல்) பதிவு செய்து ஒரே ஒரு நாள் தியானம் என்று கூட்டி வந்தார்கள். நானும் ஒரு நாள் தானே என்று ஒரு நாளைக்கு மட்டும் துணியை எடுத்துக்கொண்டு வந்தேன். இங்கு வந்தபின் தான் எனக்கே தெரிந்ததது இது 5 நாள் தியானம் என்று.

என்னால் ¼ பாட்டில் இல்லாமல் இருக்கவே முடியாது. எனவே அவர்களுக்கு தெரியாமல் ஒடி விடலாம் என்று நினைத்தேன். சரி பார்க்கலாம் என்று 2ம் நாள் தங்கினேன். எனது வலது கையை என்னால் வேகமாக நீட்ட முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. முட்டி போட முடியாது. என்ன செய்தாலும் வலி எடுக்கும். என்ன ஆச்சரியம். 2ம் நாளிலிருந்து என் வலி எங்கே போனது என்றே தெரியவில்லை. நன்றி பாடலில் நான் என்ன ஆட்டம் ஆடினேன் என்பது எல்லோரும் கண்ட உண்மை. என்னை ஒரு மிகப்பெரிய சாட்சியாக மாற்றிய கடவுளுக்கு கோடி நன்றி.

ஜோசப் – சேலம் , அக்டோபர் 15, 2015:

நான் இங்கு தியானத்திற்கு வந்த போது பலவிதமான உடல் வியாதிகளோடு வந்தேன். எனக்கு கடந்த 6 மாதங்களாக தாங்க முடியாத முதுகுவலி. ஒரு மருத்துவமும் கேட்கவில்லை. ஆனால் தியானத்தின் 3ம் நாளிலிருந்து என் முதுகுவலி நீங்கி விட்டது. கால் வலியும் குறைந்துவிட்டது. யூரினல் இன்ஃபெக்க்ஷனால் அவதியுற்று வந்தேன். அதுவும் நீங்கியுள்ளது. என் இதயத்தில் அடைப்பு உள்ளதாக கூறினார்கள். இரத்த ஓட்டமே விட்டு விட்டு செல்லும். ஆனால் இந்த தியானத்தில் அது முற்றிலும் நீங்கியுள்ளது. எனக்கு ரத்த ஓட்டம் மிகவும் சீராக உள்ளது. என்னை சுகப்படுத்திய ஆண்டவருக்கு நன்றி.

சகாயமேரி – நாகர்கோயில் , அக்டோபர் 15, 2015:

எனக்கு தொடர்ச்சியான முதுகுவலி உண்டு. இருதயத்தில் அடைப்பு. என்னல் சாதரணமாக அதிக நேரம் உட்காரவே முடியாது. பகலில் தூங்காமலும் இருக்க முடியாது. ஆனல் கடந்த 4 நாட்களாக நான் உறங்கவேயில்லை. எல்லா வகுப்புகளையும் நன்றாக அமர்ந்த்து கவனித்தேன். எனக்கு அடிக்கடி மூச்சு முட்டும். இங்கு வந்த நான் எந்த மாத்திரைகளையும் எடுக்கவேயில்லை. என் முதுகு வலி, மூச்சு முட்டல், உடல் வேதனை என அத்தனையும் 3 நாட்களில் சுகப்படுத்தி கொடுத்த கடவுளுக்கு நன்றி.

சபீனா – அரூர் , அக்டோபர் 15, 2015:

எனக்கு குழந்தை பிறந்து 3 மாதங்களாகிறது. மகன் பிறந்ததிலிருந்து கண்ணீர் விட்டு அழுது கொண்டேயிருக்கிறேன். மகன் பிறந்ததுமே அவனுக்கு கேன்சர் என்று கூறிவிட்டார்கள். எனக்கும் மார்பில் கட்டி உள்ளது. அதுவும் கேன்சர் ஆக இருக்கலாம் என்று கூறிவிட்டார்கள். அதை கேட்டதிலிருந்தே எனக்கு உறக்கமேயில்லை. தினமும் அந்த யேசாண்டவரிடம் தான் வேண்டுகிறேன். தியானத்தின் 2ம் நாளில் மனம்விட்டு பாவசங்கீர்த்தனம் செய்தேன். அன்று இரவு நடந்த ஆராதனை நிகழ்விலே அருட்தந்தை அவர்கள் கேன்சர் கட்டி உள்ள இருவர் குணமடைவதாக கூறினார்கள்.

அன்று மறுநாளிருந்து அந்த கட்டியானது எனக்கு கரைந்து விட்டது. எனக்கு அந்த இடத்தில் எந்த வலியும் இல்லை. என் பிள்ளையின் கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டேயிருக்கும். துனியைவைத்து துடைத்துகொண்டே இருப்பேன். அதே நாளில் இருந்து நீர் வடிவது முற்றிலும் நின்று விட்டது. அவனுக்கு இருப்பதாக கூரிய கேன்சர் வியாதியில் இருந்தும் கடவுள் அவனுக்கு விடுதலை கொடுத்திருப்பார் என்று முழுமையாக நம்புகிறேன். மீண்டும் நான் வந்து சாட்சி சொல்வேன். யேசுவுக்கே புகழ்.