Testimonies - 2015 November Retreat (Laity)
சாட்சியங்கள் - 2015 நவம்பர் மாத தியானம் (பொதுமக்கள்)
ஸ்டேன்லி ஜான் – சென்னை , நவம்பர் 12, 2015:

எனக்கு மெமரி லாஸ் பிரச்னை உள்ளது. திடீர் திடீர் என்று எல்லாவற்றையும் மறந்து விடுவேன். ஆனால் இங்கு தியானத்திற்கு வந்த இந்த 4 நாட்களும் எனக்கு எந்த மறதியும் ஏற்படவில்லை. எல்லாவற்றையும் சரியாக செய்கிறேன். என்னை கடவுள் தொட்டு ஆசீர்வதித்து இருக்கிறார்.

மேலும் எனது இடது கால் பெருவிரலில் பெரிய வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமல் தியானத்திற்க்கு வந்தேன். இங்கு வந்த பிறகு அது முற்றிலும் குணமாகி விட்டது. ( கால் விரலை காட்டுகிறார்) இறைவனுக்கு கோடி நன்றி.

மதலைமுத்து – தர்மபுரி , நவம்பர் 12, 2015:

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரவில் நான் 2 வீலரில் சென்று கொண்டு இருந்த போது, என் கண்ணில் ஒரு பூச்சி அடித்து அதன் கொடுக்கானது கருவிழிகளுக்குள் மாட்டிகொண்டுவிட்டது. பல கண் டாக்டர்களையும் பார்த்து விட்டேன். என் கண்ணில் சீழ்பிடித்து கரு விழியே மஞ்சளாக மாறி விட்டது. கண்ணும் தெரியவில்லை. எனது கண்ணில் வலி ஏற்படும்போது பக்கத்தில் என்ன இருக்கிறதோ அதையெல்லாம் பிய்த்து எறிந்து விடுவேன். பயங்கரமான தலைவலி, கண்வலி என்று கடந்த 2 மாதமாக மிகவும் துன்பப்பட்டேன்.

கடந்த இரு வாரமாக நான் இந்த ஆசிரமத்திலேயே தங்கியிருக்கிறேன். இந்த தியானத்திலும் கலந்து கொண்டேன். என் கண் வீக்கமெல்லாம் வடிந்து, வலியெல்லாம் குறைந்து விட்டது. என் கண் கருவிழியும் மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ளது. எதுவுமே தெரியாதிருந்த என் கண்ணில் தற்போது உருவங்கள் மெதுவாக தெரிய ஆரம்பித்து இருக்கிறது. எனது விசுவாசத்தை திடப்படுத்தி என்னில் அதிசயத்தை நிகழ்த்திய இறைமகன் இயேசுவுக்கு கோடி ஸ்தோத்திரம்.

அலோசியஸ் டேனியல் – ஓசூர் , நவம்பர் 12, 2015:

எனக்கு மன அழுத்த வியாதி உள்ளது. இதன் காரணமாக எனக்கு டிஸ்க் கொலாப்ஸ் என்னும் பிரச்னை உள்ளது. இதனால் இடுப்பிலிருந்து கால் வரை மரத்து போய்விடும். இடுப்பில் கடுமையான வலி எப்போதும். டாக்டர்கள் , ஆஸ்ப்பத்திரிகள் என எவ்வளவோ செலவு செய்தாகிவிட்டது. எவ்வளவோ மருந்துகள் சாப்பிட்டாகி விட்டது. டாக்டர்கள் வெறும் அறிவுரை மட்டுமே கூறுகிறார்கள். ஒரே இடத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் உட்காரகூடாது. ஒரே நிலையில் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்க கூடாது. குனிய கூடாது. வெயிட் எதுவும் தூக்க கூடாது. அப்படி தூக்க நேர்ந்தால் 2 கிலோவிற்க்கு மேல் தூக்க கூடாது.

எனக்கு 2 பிள்ளைகள். அவர்களை கூட தூக்க முடியாது. இந்த நிலையில் தான், நான் தியானத்தில் கலந்து கொண்டேன். 2ம் நாள் மாலையில் இருந்து வலியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. இன்று காலையில் இருந்து இடுப்பில் எந்த வலியும் சுத்தமாக இல்லை. நமது வலியானது என்ன ஆனது? என்று நானே கேட்டுக் கொண்டேன். மேலும் மன அழுத்தத்தினால் நிறைய வியாதிகளும் துணையாக வரும். சரியான தூக்கம் இல்லாததால் வாயில் புண்கள் வந்து மவுத் அல்சர் வந்தது. டாக்டரிடம் காட்டிய போது மருந்து எழுதி கொடுத்தார்.

டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷனை இன்டர் நெட்டில் சரிபார்த்தபோது அந்த மருந்துகள் கேன்சர் வியாதிக்கான ஆரம்ப நிலை மருந்து என்று தெரிந்தது. அதாவது இந்த அல்சர் இன்னும் சற்று நாளில் கேன்சர் ஆக மாறும். இதனால் என்னால் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ எதையும் குடிக்க முடியாது. காரமாகவும் எதுவும் சாப்பிட முடியாது. ஆனால் இங்கு வந்த 2 ம் நாளிலிருந்து டீ குடிக்கிறேன். இன்று கூட மீன் குழம்பு சாப்பிட்டேன். வாயில் எந்த எரிச்சலும் இல்லை. நன்றாக குணமடைந்து இருக்கிறேன். கடவுள் என்னை குணப்படுத்தி இருக்கிறார். இறைமகன் இயேசுவுக்கு நன்றி.

ஹெலன் மேரி – நாமக்கல் , நவம்பர் 12, 2015:

எனக்கு உள்ள வியாதியை கேட்டால் எல்லோரும் சிரிப்பீர்கள். கடந்த 15 ஆண்டுகளாகவே எனக்கு மரணபய நோய் உள்ளது. உடலில் ஒரு கட்டி வந்துவிட்டால் கேன்சர் வந்து சாகப்போகிறோம் என்று பயப்படுவேன். நெஞ்சு படபடத்தால், இருதயம் வெடித்து சாகப்போகிறோம், வெளியில் இறந்தவர்கள் யாரையாவது எடுத்து சென்றால், நாளைக்கு நாம் சாகப்போகிறோம், வெடி வெடித்தால் கூட யாரோ பாம் வைத்து விட்டார்கள் நாம் சாகப்போகிறோம். இப்படியாக எதற்கெடுத்தாலும் மரணம், சாவு என்று பயம். இரவில் படுத்தால் கூட ஃபேன் கழன்று விழுந்து சாகப்போகிறோம் என நினைப்பேன். போனால் போகட்டும் போடா என்று பாட்டு பாடினால் கூட ஓடிச் சென்று டிவியை ஆஃப் செய்து விடுவேன்.

இங்கு வந்த முதல் நாள் கூட எனக்கு தூக்கமே இல்லை. 2ம் நாள் பாவசங்கீர்த்தனம் செய்துவிட்டு வந்தபின் நடந்த ஆராதனையில் அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள் மரணபயத்தில் இருந்து ஒரு சகோதரியை கடவுள் விடுதலை செய்கிறார் என்று சொன்னார்கள். உடனே ஆலயத்திலேயே நான் புரண்டு அழுதேன். அது நானாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். என்ன ஆச்சர்யம். அப்போதே என் மனது பஞ்சுபோல் மாறுவதை உணர்ந்தேன். அப்போதிருந்து அந்த மரண பயம் என்னை விட்டு போய்விட்டது.

இந்த தியானத்திற்கு வந்த பின் எனக்கு நடந்த இன்னொரு அதிசயம். எனக்கு சாப்பிட்டாலோ, ஏதாவது குடித்தாலோ உடனே பாத்ரூம் போகவேண்டும். இங்கு வந்தவுடன் ஆண்டவரிடம் வேண்டினேன். நான் எந்த வகுப்பையும் மிஸ் பண்ணக் கூடாது. ஒவ்வொரு முறையும் நான் பாத்ரூம் ஓடக் கூடாது. எனக்கு இந்த பிரச்சினையில் இருந்து விடுதலை தரவேண்டும் ஆண்டவரே என்று வேண்டினேன். அதிசயம் செய்தார் இயேசாண்டவர். ஒரு முறை கூட நான் இடையில் பாத்ரூம் செல்லவில்லை. கடவுளுக்கு நன்றி.

அந்தோணிமேரி – சிவகங்கை , நவம்பர் 12, 2015:

கடந்த 7 ஆண்டுகளாக பில்லி, சூனிய கட்டுகளினால் அவதிப்பட்டு வந்தேன். என் மகளை கண்டாலே அவளை கொன்று விட வேண்டும் என்று ஒரு வெறி வரும். இது அந்த கட்டினால் தான் என்று தெரியும். அவளை பார்க்கவே எனக்கு பிடிக்காது. இதிலிருந்து எனக்கு விடுத்லை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தான் இந்த தியானத்திற்க்கு வந்தேன்.

கவுன்சிலிங் நிகழ்விலே சகோதரரர் அவர்கள், என் தலையில் கை வைத்து ஜெபித்தார். எனக்கு ஒரு அலைக்கழிப்பு உண்டாயிற்று. தொடர்ந்து ஜெபம் செய்தார். என்னை விட்டு ஏதோ விலகியதை அப்போது உணர்ந்தேன். அது முதல் என் மகளை கண்டாலே அவளை எடுத்து கொஞ்ச வேண்டும் போல் உள்ளது. இத்தனை நாள் இருந்த என் மன பாரம் விலகியது. இயேசப்பாவுக்கு நன்றி.

ஹர்ஷா – ஊட்டி , நவம்பர் 12, 2015:

எனக்கு வெகு நாட்களாகவே கை, கால்கள் பெரிதாக வீங்கி விடும். கால் கொலுசு மற்றும் மெட்டியை கழற்றி வீசி விடுவேன். அதே போல் கை மோதிரத்தையும் கழற்றி வீசி விடுவேன். என்னால் வேகமாகவே நடக்க முடியாது. ஒரு ரோபோ எப்படி நடக்குமோ அப்படி தான் நடப்பேன். என் கணவரும் என் மாமியாரும் நான் நடப்பதை பார்த்து கிண்டல் செய்வார்கள். நான் பட்ட வேதனைகளுக்கு அளவே இல்லை. நான் விழுங்கும் மாத்திரைகள், சாப்பாடு சாப்பிடுவது போல் இருக்கும். இங்கு வந்த நாள் முதல் என் கை, கால் வலி குறைந்து விட்டது. வீக்கம் முற்றிலும் வடிந்து விட்டது. எல்லோருக்கும் முன்பாக நடந்து வருகிறேன்.

மேலும் எனக்கு தலை குளித்து விட்டால் கையை தோள் பட்டைக்கு மேல் தூக்கவே முடியாது. ஆனால் இங்கு வந்ததிலிருந்து எனக்கு அல்லேலூயா சொல்லும் போது கையை தூக்காமல் இருக்க கூடாது ஆண்டவரே என்று வேண்டிக்கொண்டேன். என்ன அதிசயம். என்னால் அருமையாக கை தூக்க முடிகிறது. என்னை அழைத்து சுகப்படுத்திய கடவுளுக்கு நன்றி.